நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கி.. தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்..!

Mahendran

திங்கள், 17 ஜூன் 2024 (17:47 IST)
நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கி வழங்காதது தொடர்பான வழக்கில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அரவிந்த்சாமி , அமலாபால் உள்பட பலர் நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் தனக்கு சம்பள பாக்கி 35 லட்சம் ரூபாயை தரவில்லை என தயாரிப்பாளர் மீது அரவிந்த்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
தயாரிப்பாளர் முருகன் குமார் என்பவருக்கு எதிரான இந்த வழக்கு விசாரணையில்  அரவிந்த்சாமிக்கு சேர வேண்டிய 35 லட்சம் மற்றும் 18 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
 
ஆனால் நீதிமன்ற உத்தரவுபடி தொகையை வழங்காததால் உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிடக்கோரி அரவிந்த்சாமி மீண்டும் அனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது தயாரிப்பாளரிடம் பணம் இல்லை என்று கூறப்பட்டது
 
அப்படியென்றால் அவரை திவால் ஆனவர் என்று அறிவித்து கைதை தவிர்க்கலாம் என நீதிபதி தெரிவித்த நிலையில்  தயாரிப்பாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு ஜூலை எட்டாம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்