ஆதிபுருஷ் படத்தை டார்ச்சர் என விமர்சித்த தணிக்கைக் குழு உறுப்பினர்!

திங்கள், 12 ஜூன் 2023 (15:04 IST)
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த படம் பேன் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.

ஜூன் 16 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்துக்கு இந்தியா முழுவதும் படக்குழு ப்ரமோஷன் செய்து வருகிறது. படத்துக்காக அனைத்து தியேட்டர்களிலும் ஒரு இருக்கையை காலியாக விட உள்ளதாக படக்குழு அறிவித்தது ட்ரோல்கள் உருவாக வழிவகுத்தது.

இந்நிலையில் இந்த படத்தை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்ய இப்போது சென்சார் செய்து வருகின்றனர். இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த விமர்சகரும் தணிக்கைத் துறை உறுப்பினருமான உமைர் சந்து இந்த படத்தை ஒரே வார்த்தையில் “டார்ச்சர்” என விமர்சித்துள்ளார். படத்தின் ரிலீஸுக்கு முன்பே இப்படி அவர் விமர்சித்திருப்பது பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்