தன் திருமணம் பற்றி ரசிகர்களுக்கு உறுதியளித்த பிரபாஸ்..!

வெள்ளி, 9 ஜூன் 2023 (07:18 IST)
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார்.  சீதாவாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்துள்ளார். இந்த படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த படம் பேன் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் ஆந்திராவின் திருப்பதியில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய பிரபாஸ் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவரின் திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்தார் பிரபாஸ்.

அவரது பதிலில் “எப்போது நான் திருமணம் செய்தாலும் திருப்பதியில் தான் என் திருமணம் நடக்கும்” எனக் கூறியுள்ளார். ஆதிபுருஷ் கதாநாயகி கீர்த்தி சனோனை பிரபாஸ் காதலிப்பதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்ய உள்ளார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்