''மாமனிதன்'' படத்திற்கு சென்சார் சான்றிதழ்....

செவ்வாய், 28 டிசம்பர் 2021 (22:32 IST)
'மாமனிதன்' படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன். ஏற்கனவே விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில் வெளியான தர்மதுரை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மாமனிதன் படமும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு முதன்முறையாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

மாமனிதன் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் டீசர் சில நாட்களுக்கு யூடியூபில் வெளியாகி வைரலானது.

இ ந் நிலையில் இப்படத்திற்கு  யு ( u)  சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படம் குடும்பப் படமாக உருவாகியுள்ளதால் இப்படம்  நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்