சென்சார் போர்டால் இ.எம்.ஐ.யாக மாறிய ஜி.எஸ்.டி.

வியாழன், 16 நவம்பர் 2017 (15:11 IST)
சென்சார் போர்டு அதிகாரிகள் சொன்னதால், பாடலில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி. என்ற வார்த்தையை இ.எம்.ஐ. என மாற்றியிருக்கிறது ‘அண்ணாதுரை’ படக்குழு.


 
 
சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘அண்ணாதுரை’. டயானா சாம்பிகா, மகிமா, ஜுவல்மேரி என மூன்று ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ராதிகா சரத்குமார், ஃபாத்திமா விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
 
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில், ‘ஜி.எஸ்.டி. போல என்னை நீயும் வச்சி செய்யுறியே...’ என எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் அருண் பாரதி. ஆனால், சென்சார் போர்டு அதிகாரிகள் ஜி.எஸ்.டி. என்ற வார்த்தையை நீக்கச் சொல்லிவிட்டார்களாம். எனவே, ஜி.எஸ்.டி. என்பதற்குப் பதிலாக, இ.எம்.ஐ. என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மறுபடியும் பாடலை ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்