அயோத்தி படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு தடைகோரிய மனு தள்ளுபடி!

செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (15:22 IST)
சசிகுமார், புகழ் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த ‘அயோத்தி’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆனது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் ஒரு குடும்பத்தில் நடக்கும் இறப்பு மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை மனிதம் கலந்து சொல்லி இருக்கும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்விப் படங்களாகவே கொடுத்து வந்த சசிகுமாருக்கு இந்த படம் ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் திரைக்கதையில் பங்காற்றிய சங்கர்தாஸ் திரைக்கதை தன்னுடையது என்றும் ஆனால் படத்தில் தனக்கு எந்த கிரெடிட்ஸும் கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி, படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் இயக்குனர் மந்திரமூர்த்தி தரப்பு வழக்கறிஞர் “கதை 2016 ஆம் ஆண்டிலேயே பதிவு செய்யப்பட்டது.  மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. படம் திரையரங்கில் ரிலீஸாகி வெற்றி பெற்ற நிலையில் ஓடிடியில் வெளியிடக் கூடாது என்பதை ஏற்க முடியாது” என வாதிட்டார். இதையேற்ற நீதிமன்றம் மனுதாரர் சங்கர்தாஸின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்