ஆமா இதுதான் இப்ப முக்கியம்… விஜய் பற்றிய கேள்விக்கு மன்சூர் அலிகானின் பதில்!

செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (15:05 IST)
தமிழில் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் லோகேஷ் கனகராஜ். கைதி, விக்ரம் மூலமாக இவர் உருவாக்கியுள்ள லோக்கிவெர்ஸுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைகிறார். இந்த படத்துக்கு லியோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் முக்கியமான காட்சிகளை படமாக்கிவிட்டு இப்போது சென்னையில் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்த படத்தில் லோகேஷின் விருப்ப நடிகரான மன்சூர் அலிகான் இந்த படத்தில் தான் நடிக்கிறார். இந்நிலையில் வேறு ஒரு படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மன்சூர் அலிகானிடம் விஜய்யின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு நாட்டில் எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் உள்ளன. மக்கள் அரசியல் ரீதியாக பின் தங்கி உள்ளார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு இது தேவையா எனக் கேட்டு நோஸ் கட் பதிலளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்