நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டில் கேப்டன்… தொண்டர்களுக்கு உற்சாக செய்தி!

வெள்ளி, 11 மார்ச் 2022 (16:23 IST)
கேப்டன் விஜயகாந்த் விஜய் ஆண்டனி நடிக்கும் மழைபிடிக்காத மனிதன் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்தன. இவரது நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். தனது ரசிகர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இவர் ஏராளமான உதவிகள் செய்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர் சில ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சாதனை படைத்தார்.

சமீப நாட்களாக நடிகர் விஜயகாந்த் உடல் நடல்க்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரசியல் முக்கிய நிகழ்வுகளில் மட்டும் பங்கெடுத்து வருகிறார். இந்நிலையில், உடல்நலம் குணமடைந்து விரைவில் அவர் சினிமாவில் நடிக்கவுள்ளாதாகத் தகவல் வெளியாகிறது.மேலும், விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் விஜய்காந்த் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்போது அந்த படத்தில் தனது காட்சியில் கேப்டன் நடித்து முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. கேப்டனுக்காக கூட்டம் இல்லாமல் முக்கியமானப் படக்குழுவினர் மட்டும் கலந்துகொண்டு அந்த காட்சியை படமாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தி அவரின் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்