அயலான் முதல் நாள் வசூலை முந்தியதா கேப்டன் மில்லர்?

vinoth

சனி, 13 ஜனவரி 2024 (08:08 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இருப்பினும் தனுஷின் நடிப்பு மற்றும் ஜி வி பிரகாஷின் பின்னணி இசை ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்த அம்சங்களாக அமைந்துள்ளன. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் சிறப்பாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் நாளில் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்ற அயலான் திரைப்படத்தின் வசூலே 5 கோடி ரூபாய்தான் என சொல்லப்படுகிறது. அதனால் முதல் நாள் வசூலில் அயலான் படத்தை கேப்டன் மில்லர் முந்தியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்