சினிமாவில் கவர்ச்சி மட்டும் போதாது; தமன்னா விளக்கம்

திங்கள், 10 ஜூலை 2017 (19:15 IST)
அழகு, கவர்ச்சியை மட்டும் வைத்து சினிமாவில் ஜெயித்து விட முடியாது என நடிகை தமன்னா கூறியுள்ளார்.


 

 
தமிழ், தெலுங்கு ஆகிய சினிமா துறைகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. பாகுபலி படத்திற்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் அதிக அளவில் குவிந்து வருகிறது. தர்மதுரை மற்றும் பாகுபலி ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். 
 
பாகுபலி படத்திற்கு பிறகு நயன்தாரா, அனுஷ்கா ஆகியோர் வரிசையில் இவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தெரிவித்தார். இந்நிலையில் இவர் சினிமாவில் கவர்ச்சி மட்டும் போதாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
 
சினிமாவில் அழகு, கவர்ச்சியை மட்டுமே வைத்து ஜெயிக்க முடியாது. திறமையும் வேண்டும். காதல் காட்சிகளில் மட்டும் வந்து போவது நடிப்பு இல்லை. அதையும் கடந்து தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தால் மட்டுமே திரையுலகில் நீடிக்க முடியும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்