நடன இயக்குனர் பிருந்தாவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

வெள்ளி, 10 ஜூன் 2022 (18:08 IST)
நடன இயக்குனர் பிருந்தாவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
பிரபல நடன இயக்குனர் பிருந்தா ’ஹே சினாமிகா’ என்ற படத்தை சமீபத்தில் இயக்கினார் என்பதும், துல்க சல்மான், அதிதிராவ் ஹைத்ரி நடித்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டைட்டிலை அனிருத் உட்பட பல பிரமுகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்
 
இந்த படத்தின் டைட்டில் ’குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ என்று வைக்கப்பட்டுள்ளது ஷிபு தமீம் தயாரிப்பில் சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சிம்ஹா, ஆர்கே சுரேஷ், முனிஸ்காந்த் உள்பட பலர் இந்த திரைபடத்தில் நடிக்கின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்