’நீங்களா சொல்லிட்டிங்கன்னா விட்ருவேன்: நடன இயக்குனர் பிருந்தாவின் ‘தக்ஸ்’ டிரைலர்..!

வெள்ளி, 27 ஜனவரி 2023 (18:49 IST)
தமிழ் திரை உலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான பிருந்தா இயக்கத்தில் உருவான ஹேய் சினாமிகா என்ற திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
 
இந்த நிலையில் நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவாகிய அடுத்த திரைப்படம் ’தக்ஸ்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வழியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் வீடியோ வைரல் ஆகி வருகிறது. ஹரூன் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் பாபி சிம்ஹா, ஆர் கே சுரேஷ், முனிஷ்காந்த்  உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்