இன்று மாலை வெளியாக அஜித் 61 பட தலைப்பு இதுதானா?

புதன், 21 செப்டம்பர் 2022 (15:14 IST)
அஜித் 61 படத்தின் தலைப்பு பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு மார்ச் மாதம் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து அதற்காக தீவிரமாக செயல்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு ‘துணிவே துணை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் இப்போது படத்துக்கு துணிவு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று மாலை படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்