இந்நிலையில் படத்தின் இணைத் தயாரிப்பாளரான யுவன் சங்கர் ராஜாவின் ஒ எஸ் ஆர் பிலிம்ஸ் வெளியேற்றப்பட்டு தற்போது, 'செம போத ஆகாதே' படத்தை விநியோகம் செய்த எட்சட்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது. இன்னும் 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளதால் கொலையுதிர் காலம் படத்தை 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். ஏற்கனவே ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் வெளியாக உள்ள நிலையில் நயன்தாராவின் படமும் வெளியாக உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.