நான் இந்த சாதி தாண்டா!!! செருப்படி கொடுத்த பிக்பாஸ் நடிகை
வெள்ளி, 30 நவம்பர் 2018 (09:18 IST)
பிக்பாஸில் பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற நடிகை ரித்விகா, ஜாதி பற்றிய கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை ரித்விகா இவரை தெரியாத ஆளே இருக்க முடியாது. கபாலி, மெட்ராஸ், பரதேசி, டார்ச் லைட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாசில் பங்கேற்று தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் தான் நம் ரித்விகா.
பிக்பாஸ் ரித்விகா அந்த சாதியை சேர்ந்தவர் என்பதால் தான் அவருக்கு டைட்டில் வின்னர் பட்ட கிடைத்தது எனவும் என்று அவர் எந்த சாதி என கேட்டும் சில சாதி மிருகங்கள் குறை கூறி வந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கெல்லாம் செருப்படி கொடுக்கும் விதத்தில், ரித்விகா நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.