பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த இரண்டு நடிகைகளா?
புதன், 24 ஆகஸ்ட் 2022 (20:30 IST)
பிக்பாஸ் ஐந்து சீசன்கள் முடிவடைந்து 6வது சீசன் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் 6வது சீசனில் 2 நடிகைகள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது
மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த தர்ஷா குப்தா, பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது
அதேபோல் நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஆகிய இருவருமே தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருவதால் பிக்பாஸ் வீட்டில் இவர்கள் கலந்து கொண்டால் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது