பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷனில் வனிதா, மதுமிதா, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றனர். தற்போது இதில் யார் காப்பாற்றப்பட்டனர். யார் வெளியேற்றப்பட்டனர் என்ற புதிய தகவல் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது.
நாட்டமை கமல் இந்த வார எவிக்ஷனை வித்யாசமான முறையில் கையாண்டுள்ளார். அதாவது, இந்த வராம மோகன் வைத்யா வேட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. எவிக்ஷனில் மோகன் வைத்யாவின் பெயரை சொன்னதும் போட்டியாளர்கள் அனைவரும் கதறி அழுது விட்டார்கள். சாண்டி தனது குருநாதர் வெளியேறிவிட்டார் என்று தெரிந்ததும் மிகவும் அழுதாராம்.
ஆனால், சிறுது நேரம் கழித்து நான் சும்மா பிராங்க் செய்தேன் இந்த வாரம் மோகன் வைத்யா காப்பாற்றபட்டுவிட்டார். என்று கூறியதும் போட்டியாளர்கள் சற்று நேரம் திகைத்துவிட்டனர். நாம் அனைவரும் மோகன் வைத்யா தான் இந்த வாரம் வெளியேற போகிறார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அவர் காப்பாற்றபட்டுள்ளார் என்ற செய்தி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.