கமல், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவரும் இப்படத்தின் அடிக்கடி செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கிறது. அண்மையில் கூட கமல் ஹாசன் சேனாதிபதி தோற்றத்தில் கருப்பு குதிரையில் சண்டைக்கு செல்லும் காட்சிகளும் , ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வெளியாகி ஸ்வாரஸ்யத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கமலின் ஸ்டைலிஷ் அண்ட் லுக்குக்கு காரணமாக இருந்த அம்ரிதா ராம் இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசனின் ஸ்டைலிஷராக பணியாற்றவுள்ளார். இவர் ஏற்கனவே விஸ்வரூபம்-2 படத்தில் பணியாற்றியிருந்தார். இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசனின் 90 வயது முதியவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு அவருடைய வயதிற்கேற்ற முகபாவம், துணி அலங்காரமும் அம்ரிதா ராம் செய்து வருகிறார்.