அவ்ளோவ் தான்... சந்திரமுகியாக மாறிய பாலாவை பார்க்கணுமே.... கூட்ட முடியாது. இன்னொரு வாட்டி சோம்பேறின்னு சொன்னீங்கன்னா அவ்ளோவ் தாண்டா உனக்கு என கடுமையாக திட்டி கோபப்பட்டுள்ளார். ஏற்கனவே பாலா அடாவடி , அராஜகம் வீட்டில் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இடையில் அவரது நண்பர் வேறு வந்து உசுப்பேத்தி விட்டுட்டு போய்விட்டார்.
இருக்கட்டும் இதுவும் நல்லதுக்காகவே தான். இப்போ தான் ஆரியின் நல்ல குணம் எல்லோருக்கும் தெரியவரும். அவர் டைட்டில் கார்ட் வெல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளது. என்ன நடந்தாலும் அது ஆரிக்கு சாதகமாகவே நடக்கட்டும் என ஆடியன்ஸ் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் பாலாவை தொடர்ந்து ஆரியுவுடன் ரியோ சண்டையிடுகிறார்.
அதாவது, பாலாவுடன் சண்டையிட்டதற்கு ஆரிக்கு பஞ்சாயத்து பண்ண ரியோ " என்ன கூப்பிட்டு எத்தனை விஷயங்கள் நீங்க சொல்லியிருக்கீங்க? அதெல்லாம் என் மேல் இருக்கும் அக்கரையில் சொல்றீங்க ன்று மதித்துள்ளேன். ஆனால், நீங்கள் நான் நல்லதாக சொல்லும் எதையும் ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தில் இல்லை என வாய்க்கு வந்தபடி திட்டி விட்டார்.