எத்தனை பிக்பாஸ் நடத்தினாலும் முதல் சீசன் போல் எப்பவும் வராது என பலரும் புலம்புவதுண்டு. காரணம் அதில் ஓவியா ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட் என்றாலும் காதல் , சண்டை , வாக்குவாதம் , என எல்லாவற்றிலும் ஒரு உண்மை இருந்தது.
அதாவது, போட்டியாளர்கள் பெயர் ஸ்க்ரீனில் வந்ததும் அவர் எங்கிருந்தாலும் ஓடி சென்று பாலை பிடிக்கவேண்டும். இதெல்லாம் ஒரு கேம்ன்னு சொல்லி விளையாடுறாங்க பாத்தியா அவங்கள கூட விட்டுடலாம். ஆனால், இந்த விஜய் டிவியும் பிக்பாஸும் சேர்ந்துக்கிட்டு பாக்குற நம்மள முட்டாள் ஆகிடுறாங்கப்பா... அதை நினைத்தால் தான் ஆத்திரம் ஆத்திரமா வருது. இந்த மாதிரி ஒரு கண்றாவியான டாஸ்க்கை இதுக்கு முன்னால நான் பார்த்ததே இல்லைன்னு சொல்றவங்க யாராச்சும் இருக்கீங்களா?