பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஆரம்பத்தில் அன்பு , பாசம் , அக்கறை என ஒருவருக்கொருவர் ஃபேமிலியாக இருந்து நாடகமாடி வந்தனர். ஆனால், தற்ப்போது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க அவரவர் தங்களது விளையாட்டை போட்டிப்போட்டு விளையாடி டைட்டில் கார்ட் அடிக்ககாத்திருக்கின்றனர்.
இதற்கிடையில் ஆடியன்ஸின் பெரிய தலைவலியாக பார்க்கப்பட்ட அர்ச்சனா நேற்று எவிக்ஷனில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் நாமினேஷன் ப்ரோஸெஸ் ஆரம்பமாகியது. அதில் ஷிவானி,சோம், ஆஜீத் , ஆரி , கேபி , அனிதா , என ஆளாளுக்கு தங்களை தாங்களே மாற்றி மாற்றி நாமினேட் செய்துள்ளனர்.