வெற்றிமாறன் படத்தில் இருந்து விலகினாரா பாரதிராஜா?

திங்கள், 28 டிசம்பர் 2020 (14:41 IST)
வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் இருந்து பாரதிராஜா விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வருகிறார் வெற்றிமாறன். கடைசியாக அவர் இயக்கிய அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்போது கோல்டன் க்ளோப் விருது வரை சென்றுள்ளது. இதையடுத்து அவர் இயக்கும் திரைப்படத்தில் சூரியும், பாரதிராஜாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்துக்காக முதல் முதலாக வெற்றிமாறன் இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்த படத்துக்காக சத்தியமங்கலம் காடுகளின் அருகே அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் இப்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக அந்த படத்தில் இருந்து பாரதிராஜா விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக கிஷோர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்