பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற அந்தாதூன் என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதும் அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க இருந்தார். ஆனால் லூசிபர் படத்தின் ரீமேக் வாய்ப்பு வந்ததால் அதில் இருந்து விலகினார். இதையடுத்து பொன்மகள் வந்தாள் புகழ் ஜே ஜே பிரட்ரிக் இயக்க உள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு படக்குழு ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் பிரசாந்த் கருப்புக் கண்ணாடி அணிந்து பியானோ வாசிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் தலைப்பு புத்தாண்டு அன்று அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.