தமிழ் சினிமாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பெயரில் ஒரு அமைப்பு இருந்த் நிலையில், இதில் 1200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்தச் சங்கத்திற்கு விரையில் தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில், அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா என்பவர் தலைமையில் ஒரு அணியும், ஸ்ரீதேனாண்டால் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிடவுள்ளன.
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான கமல்ஹாசன் பாரதிராஜாவின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதையடுத்து கமலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாரதிராஜா ‘முடக்கத்தை உடைத்து முயற்சி எடுக்கையில் முன்னேரின் கமல்ஹாசன் வழிமொழிதல் அகமகிழ்வைத் தருகிறது. மூத்ததொரு கலைஞனின் "தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்" காலத்தின் தேவையென்ற புரிதல்போல தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்திற்காக 'நம்' தொடக்கம் போராடி நிரூபிக்கும் நன்றிகள்’ எனத் தெரிவித்துள்ளார்.