தென்னிந்திய சினிமா இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக ஆர் கே செல்வமணி இருந்து வருகிறார். வரும் 27 ஆம் தேதி இந்த சங்கத்துக்கான தேர்தல் மீண்டும் நடக்க உள்ளது. இதில் செல்வமணி தலைமையிலான அணியை பாக்கியராஜ் தலைமையிலான அணி எதிர்த்து போட்டியிடுகிறது. இந்த அணியில் பார்த்திபன், வெங்கட்பிரபு ஆகியவர்கள் மற்ற பொறுப்புகளுக்கு போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் பாக்யராஜ் அணியினரின் வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய பாக்யராஜ் இதுவரை தலைவராக இருந்த ஆர் கே செல்வமணி நல்லா சம்பாதித்து ஆண்டு அனுபவித்து விட்டார். “நீ எடுத்த படம் எல்லாம் நல்ல ஒடிச்சுன்னு சொன்னாங்க. ஆனால் அந்த படம் எல்லாம் நீதான் எடுத்தியா என்ற சந்தேகம் இப்போது வந்து விட்டது. என கடுமையாக தாக்கி பேசியுள்ளார். வழக்கமாக சகக் கலைஞர்களை அதிகமாக விமர்சிக்காத பாக்யராஜ் இப்படி பேசி இருப்பது சினிமா உலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.