குடும்பக் கட்டுப்பாடுபோல் கொரொனா தடுப்பூசி பணி...இயக்குநர் டுவீட்

புதன், 19 மே 2021 (15:55 IST)
உலகில் கொரொனா இரண்டாம் கட்ட அலைபரவிவரும் நிலையில் இந்தியாவில் இது கோர தாண்டவம் ஆடிவருகிறது.  எனவே மத்திய் அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் மக்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கொரொனா பாதிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கண்ணே கலைமானே, நீர்ப்பறவை, உள்ளிட்ட படங்களை இயக்கிய சீனுராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை எப்படி சன்மானம் தந்து வெற்றிகரமாக அன்றைக்கு நிறைவேற்றினார்களோ அது போல கொரோனா தடுப்பூசியிடும் பணியை தமிழக அரசு நிறைவேற்றி சகல மக்களும் தடுப்பூசியின் மீது ஆர்வம் கொள்ள செய்தல் வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்து இந்த டுவீட்டை உதயநிதி எம்.எல்,ஏ  மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு டேக் செய்துள்ளார்.

குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை எப்படி சன்மானம் தந்து வெற்றிகரமாக அன்றைக்கு நிறைவேற்றினார்களோ அது போல கொரோனா தடுப்பூசியிடும் பணியை தமிழக அரசு நிறைவேற்றி சகல மக்களும் தடுப்பூசியின் மீது ஆர்வம் கொள்ள செய்தல் வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.@Udhaystalin @mkstalin

— R.Seenu Ramasamy (@seenuramasamy) May 19, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்