ஐட்டம் ஆட்டக்காரி... பீட்ட ஏத்தும் ஐஸ்வர்யா தத்தாவின் வீடியோ பாடல்!

வெள்ளி, 3 டிசம்பர் 2021 (16:37 IST)
ஐஸ்வர்யா தத்தாவின் பீட்ட ஏத்தி பாடல் வீடியோ!
 
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில் சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
 
பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன் கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது ஈஷான் இயக்கத்தில் உருவாகியுள்ள பீட்ட ஏத்தி பாடலுக்கு ஆட்டம் டான்ஸ் ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ யூடியூபில் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது. வசந்த் ராமசாமி தயாரித்துள்ள இந்த பாடலை க்ஷிதா சுரேஷ் பாடியுள்ளார். இதோ அந்த பாடல் வீடியோ... 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்