பீஸ்ட் விஜய்யின் இதுவரை வெளியாகாத புகைப்படம்! – இணையத்தில் வைரல்!

ஞாயிறு, 27 மார்ச் 2022 (14:44 IST)
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் பீஸ்ட் படத்தின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் பீஸ்ட் படத்தின் அரபி குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி பெரும் ட்ரெண்டாகியுள்ளது.

ஏப்ரல் 13ம் தேதி அன்று பீஸ்ட் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் தீவிரமாக காத்து கிடக்கின்றனர். இந்நிலையில் இன்று பீஸ்ட் படத்திலிருந்து இதுவரை வெளிவராத விஜய்யின் புதிய புகைப்படம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கையில் துப்பாக்கியோடு விஜய் உள்ள அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்