அமெரிக்காவில் அதிரும் வசூல்... பட்டைய கிளப்பும் பீஸ்ட்!

வியாழன், 7 ஏப்ரல் 2022 (14:32 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி உலகம் முழவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் பீஸ்ட் படத் தயாரிப்பு நிறுவனமான  சன் பிக்சர்ஸ் செய்து வருகிறது.
 
இந்நிலையில், ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் முன்பதிவு பட்டய கிளப்பி வருகிறது. தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் இப்படம் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் வெளியாகிறது. பீஸ்ட் திரைப்படம் அமெரிக்காவில் ரூ 2 கோடிகளுக்கு மேல் முன்பதிவு நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன் மூலம் டாலர் வசூலில் பீஸ்ட் கெத்துக்காட்டும் என  பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்