ஓப்பான்ஹெய்மரை பின்னுக்கு தள்ளி வசூலில் முந்திய பார்பி… 8000 கோடி ரூபாய் வசூலா?
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (13:38 IST)
கடந்த மாதம் 21 ஆம் தேதி வெளியான ஹாலிவுட் திரைப்படம் பார்பி. பொம்மைகள் உலகில் இருந்து நிஜ உலகத்துக்கு வரும் இரு காதலர்களின் கதையை ரொமாண்டிக்காக உருவாக்கி இருந்தார் இயக்குனர் கிரேட்டா கெர்விக்.
இந்த படம் வெளியாகி 17 நாட்களில் தற்போது உலகம் முழுவதும் 100 பில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 8000 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.
பார்பி வெளியான அதே நாளில் வெளியான ஓப்பன்ஹெய்மர் படத்தை விட அதிகமாக வசூல் செய்துள்ளது. பெண் இயக்குனர் ஒருவர் இயக்கிய படம் 100 பில்லியன் டாலர் வசூலிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.