ரிலீஸுக்கு தயாராகும் பாலாவின் ‘வணங்கான்’… இந்தியன் 2 படத்தோடு மோதலா?

vinoth

புதன், 29 மே 2024 (12:08 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் இப்போது அந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல கவனத்தை ஈர்த்தது. வசனங்கள் இன்றி விறுவிறுப்பான காட்சிகளோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்த டீசர் இதுவரை 8 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு வணங்கான் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை காட்டுகிறது. 

இந்நிலையில் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தை ஜூலை மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 என்ற பிரம்மாண்ட படம் ரிலீஸாகும் நிலையில் வணங்கான் எந்த தேதியில் ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்