பாகுபலி உருவானது எப்படி? யார் இந்த சிவகாமி?

சனி, 29 ஏப்ரல் 2017 (17:28 IST)
பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளிவந்து அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் பாகுபலி படத்தின் கதை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


 
 
பாகுபலி கதையை எழுதியவர் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத். இந்த கதை சிவகாமி பர்வதம் என்ற நாவலில் இருந்து எழுதப்பட்டது.
 
அந்த நாவலின் படி சிவகாமியின் சிறு வயதில் அவரது அப்பாவை பொய் பழி சுமத்தி கொன்றுவிடுகிறார்கள். அந்த கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு பின்னாளில் தன் அப்பா தவறு செய்யவில்லை என்று நிரூபித்து மகிழ்மதியின் அரசியாக அரியாசனம் பிடிப்பாராம் சிவாகாமி தேவி.
 
இதன் பின் தான் பாகுபலி கதை தொடர்கிறதாம். இந்த நாவலில் இருந்து பாகுபலியின் கதையை மட்டும் கதையாய் எழுதியுள்ளாராம் விஜயேந்திர பிரசாத். 

வெப்துனியாவைப் படிக்கவும்