பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் பிரேமம் ஹீரோ நிவின் பாலி!

வெள்ளி, 26 மே 2017 (11:32 IST)
மலையாள நடிகர் நிவின்பாலி மலையாளம் மட்டும் அல்ல தமிழிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளனர். நிவின் பாலி -  ரீனா இருவரும் கல்லூரி படிக்கும்போதிருந்தே ஒருவரை ஒருவர் காதலித்து பிறகு திருமணம் செய்து கொண்டனர்.

 
அவர்களுக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் நேற்று அவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை நிவின் பாலி அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘It's a Girl' என சந்தோஷமாக பதிவிட்டுள்ளார்.

 
தற்போது நிவின் பாலி நடித்துள்ள நேரடித் தமிழ்ப்படம் ரிச்சி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் ஒரு தமிழ் படத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சமூக வலைதளங்களில் நிவின் பாலிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்