‘அவதார்’ கலெக்‌ஷனை முறியடிக்குமாம் ரஜினி – ராஜமெளலி கூட்டணி…

செவ்வாய், 2 மே 2017 (12:57 IST)
ரஜினியும், ராஜமெளலியும் இணைந்தால், ‘அவதார்’ கலெக்‌ஷனை முறியடித்து விடலாம் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர்  அல்போன்ஸ் புத்ரன்.

 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் ‘பாகுபலி-2’. பிரபாஸ், ராணா, அனுஷ்கா,  தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் என மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படம், மூன்றே நாட்களில் 500  கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. 
 
இந்நிலையில், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை வைத்து ராஜமெளலி ஒரு படம் இயக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ‘பாகுபலி-2’ தமிழ் இசை வெளியீட்டு விழாவில் கூட இந்த கோரிக்கையை விடுத்தார் தயாரிப்பாளர் கலைப்புலி  எஸ். தாணு. 
 
இப்படியிருக்கையில், ‘ராஜமெளலி சார் ரஜினி சாரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும். அப்படி இயக்கினால், அது  ‘அவதார்’ படத்தின் வசூலைவிட அதிகமாக கலெக்‌ஷன் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார் ‘பிரேமம்’ படத்தின் இயக்குநரான  அல்போன்ஸ் புத்ரன்.

வெப்துனியாவைப் படிக்கவும்