இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்துக்குள் முகமூடி அணிந்து நுழைந்த சிலர் அங்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் படத்தின் மேக்கப் மேன் மிதுன் ஜித் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய அந்த மர்மநபர்களைத் தேடும் பணிகள் நடந்துவருகின்றன. மேலும் எதற்காக இந்த தாக்குதல் நடந்தது என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.