அட்லியின் அடுத்த படத்தில் இதுமட்டும்தான் கன்ஃபார்ம் ஆகியுள்ளதாம்… லேட்டஸ்ட் தகவல்!

புதன், 27 டிசம்பர் 2023 (06:46 IST)
ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட்டாக கொடுத்த இயக்குனர் அட்லி, அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார்.

3 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் அவர் அடுத்து விஜய் மற்றும் ஷாருக் கானை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி வெளியாகியுள்ள தகவலின் படி அட்லியின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது மட்டுமே உறுதியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற எதுவும் இதுவரை உறுதியாகவில்லை என்று சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்