அட்லி தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பேபி ஜான்… ரிலீஸ் தேதி மாற்றமா?

vinoth

திங்கள், 15 ஏப்ரல் 2024 (11:00 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’தெறி’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஹிந்தியில் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை அட்லி மற்றும் இன்னொரு பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கி வரும்ம் இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்து வருகின்றனர். மைக்கேல் படத்தின் ஒளிப்பதிவாளர் கிரண் கௌஷிக் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

பேபி ஜான் என தலைப்பிடப்பட்ட இந்த படம் மே 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் ஷூட்டிங் உள்ளிட்ட சில பணிகள் முடியாத காரணத்தால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என சொல்லப்படுகிறது. ஜூன் மாதத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்