அஜித் ரசிகராக நடிக்கும் அதர்வா!

வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (10:43 IST)
குருதி ஆட்டம் படத்தில் நடிகர் அதர்வா, அஜித் ரசிகராக நடிக்க உள்ளதாக  தெரியவந்துள்ளது.


 
தல என செல்லமாக அழைக்கப்படும் அஜித், தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராவார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.  இந்நிலையில் நடிகர் அதர்வா குருதி ஆட்டம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் அஜித்தின் ரசிகராக அதர்வாக நடிக்கிறாராம். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இப்படத்தை இயக்குகிறார். முருகானந்தம் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
 
குருதி ஆட்டம் படம் குறித்து  ஸ்ரீகணேஷ் கூறுகையில், "இந்த கதைப்படி  அதர்வா கபடி வீரர்., அஜித்தின் தீவிர ரசிகரான அவர் ஆடுகிற ஆட்டம் தான் குருதி ஆட்டம். இந்த படத்தில் பிரியா பவானி சங்கருக்கு வலுவான கதாபாத்திரம் கொடுத்துள்ளோம். அஜித் ரசிகராக வருவதற்கு முக்கியமான காரணம் இப்படத்தில் இருக்கிறது. பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டோம். இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளது" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்