3 நாட்களில் ரூ.10 கோடி மட்டுமே வசூல்: அக்‌ஷய் குமாரின் ‘செல்ஃபி’ படுதோல்வி..!

திங்கள், 27 பிப்ரவரி 2023 (20:08 IST)
அக்ஷய் குமார் நடித்த செல்பி திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியான நிலையில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இந்த படம் வெறும் பத்து கோடி மட்டுமே வசூல் செய்து உள்ளதை அடுத்து இந்த படம் தோல்வி என கூறப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகர்களின் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. ஷாருக்கானின் ‘பதான்’ மட்டுமே ஆயிரம் கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த வெள்ளி அன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது திரைப்படம் செல்பி. இந்த படம் மலையாளத்தில் வெளியான டிரைவிங் லைசன்ஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக் என்பதால் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்று கூறப்பட்டது. ஆனால் முதல் மூன்று நாட்களில் இந்த படம் வெறும் 10.30 கோடி மட்டுமே வசூலித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
முதல் நாளில் 2.55 கோடி மட்டுமே வசூல் செய்தது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இரண்டாவது நாளில் 3.80 கோடியும் மூன்றாவது நாளில் 3.95 கோடியும் மொத்தத்தில் 10.30 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது 
 
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெறும் பத்து கோடி வசூல் செய்திருப்பது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்