இயக்குனராக அறிமுகமாகும் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான்!
வியாழன், 8 டிசம்பர் 2022 (19:29 IST)
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இப்போது ஆர்யன் கான் தற்போது ஒரு வெப் சீரிஸை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுபற்றிய பதிவில் நடிகர் ஷாருக் கான் ”இப்போது தைரியமாக இருக்க வேண்டும். கனவு நனவாகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.
ஷாருக் கானின் இந்த பதிவுக்கு ஆர்யன் கான் “ ஷுட்டிங் ஸ்பாட்டில் உங்களின் சர்ப்ரைஸ் விசிட்டை எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.