ஆரம்பம் படத்துக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணைகிறாரா ஆர்யா?

புதன், 8 மார்ச் 2023 (07:57 IST)
அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகைகள் தேர்வு நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அருண்விஜய் மற்றும் அருள்நிதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படும் நிலையில் இப்போது ஆர்யாவும் ஒரு முக்கியவேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆர்யா, அஜித்துடன் ஆரம்பம் படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்