சார்பட்டா வெற்றி… ஒரே மாதத்தில் ரிலிஸாகும் ஆர்யாவின் இரண்டு படங்கள்!

திங்கள், 26 ஜூலை 2021 (15:46 IST)
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 3 மற்றும் எனிமி ஆகிய இரண்டு படங்களும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர் சி நடித்த இயக்கிய அரண்மனை மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ’அரண்மனை 3’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார்.  இந்த படத்தில் ஆர்யா, ராஷிகண்ணா, யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் ரிலிஸாக உள்ள இந்த படத்தின் அடுத்த பாகத்துக்கான வேலைகளையும் இப்போது தொடங்கியுள்ளாராம்.

நேற்று ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில் இப்போது அரண்மனை 3 படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதனால் இந்த படத்தின் வியாபார மதிப்பும் அதிகமாகியுள்ளது. திரையரங்குகள் திறந்ததும் இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலிஸாகும் என சொல்லப்படுகிறது. அதே போல ஆர்யா விஷாலுக்கு வில்லனாக நடித்த எனிமி திரைப்படமும் செப்டம்பர் மாதமே ரிலிஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்