32 கோடிக்கு விலை போன ஆர்யாவின் சார்பட்டா!!

வெள்ளி, 9 ஜூலை 2021 (12:17 IST)
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா படத்தை அமேசான் நிறுவனம் இந்தப் படத்துக்கு 32 கோடிகள் அளித்ததாக கூறப்படுகிறது. 

 
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா. இந்த படத்தில் ஆர்யாவோடு துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் 1980களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்த இந்த படம் இப்போது ஜூலை மாதம் 22 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை அமேசான் நிறுவனம் இந்தப் படத்துக்கு 32 கோடிகள் அளித்ததாக கூறப்படுகிறது. 
 
ஓடிடியில் நேரடியாக வெளியான திரைப்படங்களில் சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் ஜகமே தந்திரம் ஆகியவை அதிக தொகைக்கு விலை போன படங்கள் ஆகும். ஜகமே தந்திரம் படத்துக்கு 55 கோடிகள் அளித்தது நெட்பிளிக்ஸ்.
 
இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட டிஸ்னி + ஹாட் ஸ்டார் 42 கோடிகள் விலை பேசியுள்ளது. நான்காவதாக சார்பட்டா 32 கோடிகளுக்கு விலை போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்