அருண்விஜய்யின் 'தடம்' ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (18:39 IST)
'அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன அருண்விஜய் அதன் பின்னர் சமீபத்தில் வெளியான 'செக்க சிவந்த வானம்' வரை ஒருசில ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை கெட்டியாக பிடித்துவிட்டார்.
 
இந்த நிலையில் அருண்விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட்டான 'தடையற தாக்க' படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் மீண்டும் அருண்விஜய் நடித்த 'தடம்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தின் விளம்பர பணிகள் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 138 நிமிடங்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஒரு அதிரடி ஆக்சன் படத்திற்கான சரியான ரன்னிங் டைம் 2 மணி நேரம் 18 நிமிடங்கள் என்பதால் இந்த படம் வெற்றி அடைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.
 
அருண்ராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அருண்விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவருடன் தன்யா ஹோப், வித்யா ப்ரதீப், சோனியா அகர்வால், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இந்தர்குமார் தயாரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்