அருண் விஜய் படத்தின் டைட்டிலில் நடந்த மாற்றம்… டீசர் ரிலீஸ் எப்போது?

புதன், 5 ஏப்ரல் 2023 (07:34 IST)
பல வருடங்களாக போராடி வந்த அருண் விஜய்க்கு தடையற தாக்க மற்றும் தடம் போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து இப்போது முன்னணி நடிகராகியுள்ளார்.இதையடுத்து அவர் இப்போது இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஒரு புதுப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் பெரும்பகுதி நடந்தது. அதன் பின்னர் சென்னையில் செட் போட்டு படமாக்கப்பட்டு, ஷூட்டிங் முடிந்துள்ளது. படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் நடிக்கும் இந்த படத்துக்கு ‘அச்சம் என்பது இல்லையே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது தலைப்பில் ‘மிஷன் 1- அச்சம் என்பது இல்லையே’ என மாற்றப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டீசர் இன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்