இந்தியன் படத்தில் கமலை நடிக்க வைத்த எழுத்தாளர்!

திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (11:16 IST)
இந்தியன் படத்தில் கமல் நடிக்க எழுத்தாளர் சுஜாதாதான் முக்கியமானக் காரணம் என அந்த படத்தின் உதவி இயக்குனரான காந்தி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான வசனகர்த்தாவாக விளங்கியவர் சுஜாதா. இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் மணிரத்னம் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களில் அவர் பணிபுரிந்துள்ளார். ஷங்கருக்கு இந்தியன் படத்தின் மூலமாக எழுத்தாளராக பணியாற்ற தொடங்கினார்.

இந்தியன் படத்தை முதலில் ரஜினிக்குதான் ஷங்கர் கூறியுள்ளார். ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டார். பின்னர் கமலுக்கு சென்ற போது அவரும் நடிக்க மறுக்கவே சுஜாதாதான் கமலை சமாதானப்படுத்தி அந்த படத்தில் நடிக்க வைத்தாராம். இதை அந்த படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் காந்தி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்