ஒருபக்கம் இந்த வேலைகளை செய்துவரும் விஷால் மறுபக்கம் படங்களும் நடித்து வருகிறார். மிஷ்கின் படத்தில் நடித்துவரும் விஷால், அடுத்து இரும்புத்திரை என்ற படத்தில் நடிக்கிறார். இதில் ஆர்யா வில்லனாக நடிப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆர்யாவிற்கு பதிலாக விஷாலின் குருவான ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாக களமிறங்குகிறார்.