அரவிந்தசாமியின் ‘கள்ளபார்ட்’ டீசர் வெளியீடு!

ஞாயிறு, 5 ஜூன் 2022 (11:26 IST)
அரவிந்தசாமியின் ‘கள்ளபார்ட்’ டீசர் வெளியீடு!
அரவிந்த் சாமி நடிப்பில் உருவான ‘கள்ளபார்ட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஆன நிலையில் தற்போது ஜூன் 24ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது
 
அரவிந்த்சாமி ஜோடியாக ரெஜினா நடித்துள்ள இந்த படத்தை ராஜபாண்டி என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் டீசர் வெளியான பின்னர் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரவிந்த் சாமி  இந்த படத்தில் முழுவதும் சக்கர நாற்காலி வரும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார் என இந்த படத்தின் டீசரில் இருந்து தெரியவருகிறது
 
இதுவரை நடித்திராத வித்தியாசமான கேரக்டரில் அரவிந்த்சாமி நடித்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்