’அரண்மனை 3’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (18:15 IST)
சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ’அரண்மனை 3’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெற்றது என்பதும் இந்த படம் சென்சாருக்கு சென்றது யுஏ சான்றிதழ் பெற்று விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஆயுதபூஜை தினமான அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் ’அரண்மனை 3’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் ’அரண்மனை 3’ படத்தின் டிரைலர் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
சுந்தர்சி,ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகிபாபு, குஷ்பூ, கோவை சரளா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவில் ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை குஷ்பு மற்றும் சுந்தர் சி தயாரித்து உள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்