நடிகை ராதிகாவை கதாநாயகி ஆக்கி படம் இயக்கும் அறம் கோபி!

வெள்ளி, 24 நவம்பர் 2023 (13:57 IST)
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' திரைப்படத்துக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டுகள் கிடைத்தது. இப்படத்தை இயக்கிய கோபி நயினாருக்கும், படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் பாராட்டுகள் குவிந்தது. இதையடுத்து இயக்குனர் அறம் கோபி இயக்கத்தில் அடுத்த படம் இன்னும் வெளியாகவில்லை.

அறம் படத்துக்கு பிறகு கோபி ஜெய்யை வைத்து ஒரு படத்தை இயக்கினார். இதையடுத்து இப்போது ஆண்ட்ரியா நடிப்பில் ஒரு படத்தை இயக்கிவருவதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய கிராஸ்ரூட் பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படங்களுக்கு அடுத்து அறம் கோபி, நடிகை ராதிகாவை மையக் கதாபாத்திரமாக்கி ஒரு கதையை எழுதி எடுத்து வருவதாக கோபி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். இந்த படத்துக்கு காலணி காப்பியம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்